தமிழ் நாடு தேர்தல்
-------------------------
-------------------------
********தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.தேர்தல் பிரசாரத்தில் எத்தனை வாக்குறுகிகளை அள்ளி தெளிக்கிறார்கள் ஒவ்வொரு கட்சிக் காரர்களும்.இது எல்லாம் சகஜம் தான் என்றாலும் இதுவரை வேறு நிலைப்பாடு கொண்டவர்கள் கூட இப்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அடியொற்றி(Copy)வெளியிடுடிருக்கிறார்கள்.அதை விட கூடுதலாக ஒன்றிரண்டு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள்.அவ்வளவுக்கு திமுக அணியின் தேர்தல் அறிக்கை பாதிப்பு ஏற்ப்படுத்தியிருக்கிறது.தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அகில இந்திய அளவிலும் அதன் பாதிப்பு தெரிகிறது.தமிழ் நாட்டைப் பொறுத்த வரை திமுக கூட்டணியனர் சென்ற பாராளுமன்ற,சட்ட மன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.இம்முறையும் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.நம்பலாம்.மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை சிரித்து விட்டுப்(Just laugh it off)போக வேண்டியதுதான்.மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பது உண்மை.மீண்டும் சந்திப்போம் விரைவில்.