மசாலா
சப்பாத்தி
சப்பாத்தியில் நிறைய வித்யாசமான சப்பாத்தி
வகைகளை செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மசாலா சப்பாத்தி எல்லவற்றிலும்
வித்தியாசமானது. மிக, மிகச் சுவையாக இருக்கும். இது முழுக்க முழுக்க எங்கள் வீட்டு
செய்முறை © கட்டாயம் செய்து பாருங்கள்...
சேவையானவை :::
1. சப்பாத்தி மாவு பிசைய :
- கோதுமை மாவு 1 கப் ( 200 கிராம் )
- எண்ணை அல்லது நெய் 2 டே. ஸ்பூன்
- கசூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) 1 டே. ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
2. உள்ளே
வைக்க மசாலா (For Stuffing) :
- உருளைக்கிழங்கு 2 – 3
- பச்சைப் பட்டாணி ¼ கப்
- சோம்பு 1 டீ. ஸ்பூன்
- மிளகாய்த் தூள் 1 – 1 ½ டே. ஸ்பூன்
- மஞ்சள் தூள் ½ டீ. ஸ்பூன்
- கரம் மசாலாத் தூள் 1 டே. ஸ்பூன்
- பச்சைக் கொத்தமல்லி 2 டே. ஸ்பூன்
- புதினா சட்னி 2 டே. ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணை 2 டே. ஸ்பூன்
செய்முறை :::
1. மசாலா(பூரணம்)செய்ய (Stuffing) :
- முதலில் உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் வேகவைத்து உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்த்தும் சோம்பு தாளித்து பொரிந்ததும், உதிர்த்த உருளைக் கிழங்கு, பச்சைப் பட்டாணி சேர்க்கவும்.
- மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், புதினா சட்னி,உப்பு சேர்த்துக் கிளறி 5 நிமிஷம் வதக்கவும்.
- பச்சைக்கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
2. மசாலா சப்பாத்தி செய்ய :
- கோதுமை மாவுடன் நெய், கசூரி மேத்தி, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவில் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை 2 டே.ஸ்பூன் அளவு வைத்து சுற்றிலும் மடித்து சப்பாத்தியாக தேய்க்கவும்.
- தோசைக்கல்லை சுடவைத்து அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சிறிது நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
- இதனுடன் புதினாசட்னி, பேரீச்சை சட்னி, எலுமிச்சை அல்லது நார்த்தங்காய் ஊறுகாய் வைத்துப் பரிமாறவும். மிக மிக சுவையாக இருக்கும்.வேறு ஸைட் டிஷ் தேவையில்லை. பிறகென்ன மீண்டும் மீண்டும்... மீண்டும்...மசாலா சப்பாத்தி தான் போங்கள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக