ஞாயிறு, 10 ஜூலை, 2016

புதுமையான புதினா சட்னி




புதினா சட்னி
அரைக்க  தேவையானவை :
  •  பச்சைக் கொத்தமல்லி   1 கட்டு
  • புதினா                           ½ கட்டு
  • இஞ்சி துருவியது           3 டே.ஸ்பூன்
  •  புளி பேஸ்ட்                   ½ டீ.ஸ்பூன்
  • பச்சை மிளகாய்             1
  •  உப்பு                             ஒரு சிட்டிகை

தாளிக்க தேவையானவை :

  •  சோம்பு                          1 டீ.ஸ்பூன்
  •  வெந்தயம்                      ¼ டீ.ஸ்பூன்
  •  எண்ணை                      3 டே.ஸ்பூன்
  • நெய்                              1 டே.ஸ்பூன்

வதக்கும்போது சேர்க்க
  •  மாங்காய் தொக்கு         3 டே.ஸ்பூன்
குறிப்பு :  
      ஊறுகாயில் உப்பு இருப்பதால் உப்பு குறைவாகச் சேர்க்கவும்.மாங்காய் தொக்கை மட்டும் கொதிக்க வைக்கும் போது சேர்க்கவும். அரைக்க வேண்டாம்.
செய்முறை :
    அரைக்க கொடுத்துள்ள எல்லாவற்றையும் சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
     ஒரு வாணலியில் எண்ணை, நெய் விட்டு சோம்பு போட்டுப் பொரிந்ததும், வெந்தயம் சேர்த்து பொரிக்கவும்.
    அரைத்து வைத்துள்ள விழுதைசயும், மாங்காய் தொக்கையும் சேர்த்து எண்ணை பிரியும் வரை வதக்கவும்.
    சுவையான புதினா சட்னி தயார் ...இது முழுக்க முழுக்க எங்கள் வீட்டு செய்முறை ©

                ❖ Adapted from K.Parimala’s Kitchen

கருத்துகள் இல்லை: