ஞாயிறு, 10 ஜூலை, 2016

புதுமையான பேரீச்சை சட்னி




பேரீச்சை சட்னி
தேவையானவை :
  • பேரீச்சை              5 – 6
  • புளி பேஸ்ட்         1 டே.ஸ்பூன்
  • மிளகாய்த் தூள்    ½ டீ.ஸ்பூன்
  • சீரகத்தூள்            ½  - 1 டீ.ஸ்பூன்
  • வெல்லம்              3 டே.ஸ்பூன்
  • உப்பு                   1 சிட்டிகை
  •  பேரீச்சை ஸிரப்  2 டே.ஸ்பூன்
  • தேன்                   2 டே.ஸ்பூன்
      குறிப்பு :
     பேரீச்சை ஸிரப் சேர்த்தால் சுவை கூடும். இல்லாமலும் செய்யலாம்.

    ❖
தேன் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.கொதிக்க

   வைத்து ஆறிய பின் தான் தேனைச்  சேர்க்க வேண்டும்.அதன் பின்
   கொதிக்க வைக்கக் கூடாது. தேவைப் பட்டால் மைக்ரோ வனில்
   சிறிது சூடு படுத்திக் கொள்ளலாம் 

செய்முறை ::
   பேரீச்சம் பழத்தை  குக்கரில் 2 விசில் வரைவேக வைத்து எடுத்து ஆற விட்டு, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
   ஒரு வாணலியில் பேரீச்சை விழுதுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து நன்றாகக்  (சிறிது கெட்டியாகும் வரை, ஸிரப் பதத்திற்கு) கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும்.

  ஆறிய பின் தேனைச் சேர்க்கவும். 


  ஃப்ர்ட்ஜில் வைத்து பயன் படுத்தலாம். தேவைப் பட்ட போது மைக்ரோ ஓவனில் சிறிது சூடு படுத்திக் கொள்ளலாம்.


 
சுவையான பேரீச்சை சட்னி தயார்.சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். ...இது முழுக்க முழுக்க எங்கள் வீட்டு செய்முறை ©

                ❖
Adapted from K.Parimala’s Kitchen

கருத்துகள் இல்லை: