********தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பறந்து பறந்து( சிலர் உண்மையாகவே ஹெலிகாப்டரிலும் பறந்து) தேர்தல் பிரச்சாரம் (பரப்புரையாமே ) செய்து வருகிறார்கள்.நல்ல வெய்யில் காலத்தில் போதாதற்கு இதுவும் சூடு பிடித்து விட்டது.ிரண்டும் சேர்ந்து அனல் பறக்கிறது.அடுத்து வரும் தேர்தல்களையாவது கொஞ்சம் முன்னேயோ பின்னேயோ மாற்ற வேண்டுங்க.தாங்க முடியலை சாமி.சம்பந்தப் பட்டவர்கள் செய்வார்களா ? இங்கே மூன்று அணிகள் அல்ல.நான்கு அணிகள்.இது போதாதா ? ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்கள்.அது சரி.இழித்தும் பழித்தும் பேசுவது என்ன நாகரிகம் ?இதற்கிடையே இலங்கை வாழ் தமிழர் பிரச்சினையை வேறு அரசியலாக்குகிறார்கள்.அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையை உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக பேசி இன்னும் சிக்கலாக்கி விட்டார்கள்.பாவம் இலங்கைத் தமிழர்கள் தான் இடையிலேஇலங்கை அரசின் கோபத்திற்கு (Wrath ) ஆளாகிறார்கள்.இலங்கை அரசு சாமி ஆடுகிறது.அந்த( உலகளாவிய) எதிர்ப்பில் கோபத்தில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது காட்ட அவர்கள் சின்னா பின்னமாகிறார்கள்.தமிழகக் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை விடுத்து தமிழக இந்திய அரசியலை மட்டும் பேசினால் ிலங்கைப் பரச்சிநை தீர வாய்ப்பிருக்கிறது.செய்வார்களா? மிக மிகக் கவலையாகத்தான் இருக்கிறது.பொறுத்திருந்து பார்க்கலாம்.இனி நாம் மக்களவைத் தேர்தலை மட்டும் பார்ப்போம் இனி வரும் பக்கங்களில்....