வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

Mosquito Menace-கொசுக்கடி

                                           கொசுத் தொல்லை
                                         
                                   கொசு இல்லாத இடமே இல்லை.
       ""ஸாமி இந்த கொசுத் தொல்லை  தாங்க முடியலைடா ஸாமி . ""
  ( இதைக்  கவுண்டமணி        ஸ்டைலில் படிக்கவும்  ) . 
        நானும்  எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து விட்டேன்.
        *** ஜன்னலுக்கெல்லாம் நெட் (Net ) போட்டாச்சு.
        *** கொசு விரட்டி வித விதமாக உபயோகித்துப் பார்த்தாச்சு.
        *** மாலை ஐந்து மணிக்கெல்லாம் போட்டுப் பார்தாச்சு.
        *** கதவுகளை எல்லாம் மாலையே மூடியாச்சு.
                                       இருந்தும் நடு இரவுக்கு மேல் கொசுக்கள் எப்படித்தான் 
          நுழைகின்றனவோ தெரியவில்லை.இரவில் கொசுக் கடி தாங்க முடியலை.
    கடைசியில் சமையலறை எக்ஸாஸ்ட் பேன்,பாத்ரூம் எக்ஸாஸ்ட் பேன்
        இவை  எல்லாம் இரவு முழுக்க ஒட விட்ட பிறகு தான் கொசுத் தொல்லை
      ஒரு முடிவுக்கு வந்தது.இப்பொழுதெல்லாம் நிம்மதியான தூக்கம் தான  போங்கள்.
                          
                              நீங்களும் முயற்சித்துப் பாருஙகள். பலன் இருக்கும்.
        கடந்த ஒரு மாதமாகக் கடை பிடித்து வருகிறேன்.நல்ல தூக்கம்.
           
                 வடிவேலு பாணியில் சொல்வதானால் "கொசுக்கடியிருந்து தப்பிக்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது  பாருங்க "