திங்கள், 13 ஜூலை, 2015

கரு வடகம் / தாளிப்பு வடகம்



தாளிக்கும் வடகம்

  • சின்ன வெங்காயம்                                    2  கிலோ
  • உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு    100 கிராம்
  • கடுகு                                                      100 கிராம்
  • சீரகம்                                                     100 கிராம்
  • வெந்தயம்                                               100 கிராம்
  • முழு பூண்டு                                             1/2 கிலோ
  • மஞ்சள் தூள்                                            2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை                                        2 கப்
  • விளக்கெண்ணெய்                                  100 மில்லி
  • உப்பு                                                       2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
  • கறிவேப்பிலையை நறுக்கவும்.
  • பூண்டு பல்லை தட்டி வைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில்- உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு  மற்றும் எல்லா சாமான்களையும் போட்டு நன்றாக பிசைந்து அமுக்கி  வலை அல்லது மெல்லிய காட்டன் துணி கொண்டு மூடி இரவு முழுவதும் வைக்கவும்.
  • காலையில் உருண்டைகளாக உருட்டவும். அச்சையும்  உபயோகப்படுத்தலாம்.
  • வெங்காயம் தண்ணீர் விடும். அதை அப்படியே மூடி வைத்திருக்கவும். வீணடிக்க வேண்டாம்.
  • உருண்டைகளை நல்ல வெயிலில் 2 நாட்கள் காய விடவும்.
  • 2 நாட்கள் கழித்து எடுத்து உருண்டைகளை வெங்காயத் தண்ணீரிலேயே உடைத்து உதிர்த்து விடவும். வெங்காயத் தண்ணீரை அது உறிஞ்சிக் கொள்ளும்.  பாதி விளக்கெண்ணையை அதில் ஊற்றி பிசைந்து அமுக்கி வைக்கவும்.
  • மறு நாள் காலை மீண்டும் உருண்டைகளாக உருட்டி 2 நாள் காய விடவும்.
  • இதில் மீதி இருக்கும் விளக்கெண்ணெயை ஊற்றி பிசைந்து மறுபடியும் உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய விடவும். ஒரு வாரம் காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்தவும்.
  ❖    குழம்பில் கடைசியாக இறக்குவதற்கு முன் இந்த வடகத்தை சிறிது எடுத்து தாளித்து அதில் கொட்டவும்.மிக ருசியாகவும் மணமாகவும் இருக்கும். 
  ❖    கூட்டிலும் கடைசியில் பொறித்து கொட்டினால் கூட்டு சுவையோ சுவை.. 
  ❖    சப்பாத்திக்கு செய்யும் குருமாவில் கடைசியில் சேர்த்தாலும் சுவையும் மணமும்  கூடும்.
  ❖     இதை தேங்காயோடு சேர்த்து துகையலாக அறைத்து இட்லி,தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்   கொண்டு சாப்பிட கன ஜோராக இருக்கும். துவையல் சற்று கார சாரமாக இருந்தால் பிறகு கேட்கவே வேண்டாம், அசத்தலோ அசத்தல் தான்.
  ❖     வெள்ளை சாதத்தில் துவையலைக் கலந்து பிசைந்து சாப்பிடவும் நல்ல ருசிதான் போங்கள்.
  ❖     புளியோதரைக்கு துவையல் கனப்பொருத்தமாக இருக்கும்.பிறகு விடவேமாட்டீர்கள்.

❖ பெரிய ஸ்டோர்களில் தாளிக்கும் வடகம் என்று கேட்டால் கிடைக்கும்.ஆனாலும் நாமே செய்வது போல் ஆகாது.அது தனி ருசி தான்.  
-
                    ❖❖❖❖❖ Adapted from K.Parimala’s Kitchen❖❖❖❖❖