தாளிக்கும் வடகம்
- சின்ன வெங்காயம் 2 கிலோ
- உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு 100 கிராம்
- கடுகு 100 கிராம்
- சீரகம் 100 கிராம்
- வெந்தயம் 100 கிராம்
- முழு பூண்டு 1/2 கிலோ
- மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை 2 கப்
- விளக்கெண்ணெய் 100 மில்லி
- உப்பு 2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
- கறிவேப்பிலையை நறுக்கவும்.
- பூண்டு பல்லை தட்டி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில்- உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு மற்றும் எல்லா சாமான்களையும் போட்டு நன்றாக பிசைந்து அமுக்கி வலை அல்லது மெல்லிய காட்டன் துணி கொண்டு மூடி இரவு முழுவதும் வைக்கவும்.
- காலையில் உருண்டைகளாக உருட்டவும். அச்சையும் உபயோகப்படுத்தலாம்.
- வெங்காயம் தண்ணீர் விடும். அதை அப்படியே மூடி வைத்திருக்கவும். வீணடிக்க வேண்டாம்.
- உருண்டைகளை நல்ல வெயிலில் 2 நாட்கள் காய விடவும்.
- 2 நாட்கள் கழித்து எடுத்து உருண்டைகளை வெங்காயத் தண்ணீரிலேயே உடைத்து உதிர்த்து விடவும். வெங்காயத் தண்ணீரை அது உறிஞ்சிக் கொள்ளும். பாதி விளக்கெண்ணையை அதில் ஊற்றி பிசைந்து அமுக்கி வைக்கவும்.
- மறு நாள் காலை மீண்டும் உருண்டைகளாக உருட்டி 2 நாள் காய விடவும்.
- இதில் மீதி இருக்கும் விளக்கெண்ணெயை ஊற்றி பிசைந்து மறுபடியும் உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய விடவும். ஒரு வாரம் காய்ந்ததும் எடுத்து பத்திரப்படுத்தவும்.
❖ குழம்பில் கடைசியாக இறக்குவதற்கு முன் இந்த வடகத்தை சிறிது எடுத்து தாளித்து
அதில் கொட்டவும்.மிக ருசியாகவும் மணமாகவும் இருக்கும்.
❖ கூட்டிலும் கடைசியில் பொறித்து கொட்டினால் கூட்டு சுவையோ சுவை..
❖ சப்பாத்திக்கு செய்யும் குருமாவில் கடைசியில் சேர்த்தாலும் சுவையும் மணமும் கூடும்.
❖ இதை தேங்காயோடு சேர்த்து துகையலாக அறைத்து இட்லி,தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட கன ஜோராக இருக்கும். துவையல் சற்று கார சாரமாக இருந்தால் பிறகு கேட்கவே வேண்டாம், அசத்தலோ அசத்தல் தான்.
❖ வெள்ளை சாதத்தில் துவையலைக் கலந்து பிசைந்து சாப்பிடவும் நல்ல ருசிதான் போங்கள்.
❖ புளியோதரைக்கு துவையல் கனப்பொருத்தமாக இருக்கும்.பிறகு விடவேமாட்டீர்கள்.

❖❖❖ பெரிய ஸ்டோர்களில் தாளிக்கும் வடகம் என்று கேட்டால் கிடைக்கும்.ஆனாலும் நாமே
செய்வது போல் ஆகாது.அது தனி ருசி தான்.
-
❖❖❖❖❖ Adapted from K.Parimala’s Kitchen❖❖❖❖❖
-
❖❖❖❖❖ Adapted from K.Parimala’s Kitchen❖❖❖❖❖