மக்காச்சோள டோக்ளா ©
Originally Shared by
Gurubarji.M
கடலை மாவில்
டோக்ளா செய்திருப்போம்.அதைக் காட்டிலும் மக்காச் சோள மாவில் - Maize Flour- (கார்ன் ஃப்ளவர் ஸ்டார்ச் அல்ல ) டோக்ளா சுவையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.செய்து பாருங்கள்.
தேவையானவை
முதலில் கலக்க
- மக்காச்சோள மாவு 1½ கப்
- தேங்காய் துருவல் 1 Tbs
- தண்ணீர் 1 கப்
- பச்சை மிளகாய் பேஸ்ட் 1 tsp
- இஞ்சி பேஸ்ட் 1 tsp
- உப்பு 1 tsp
- சர்க்கரை 1 tsp
- மஞ்சள் தூள் ½ tsp
- சமையல் சோடா ¼ tsp
- ஃப்ரூட் ஸால்ட் (ஈனோ) 1½ tsp
- எலுமிச்சை சாறு 2 tsp
- கடுகு 1 tsp
- சிவப்பு மிளகாய் 2
- கறிவேப்பிலை 1 சிறிய கொத்து
- சர்க்கரை ½ tsp
- தண்ணீர் 3-4 Tbs
- எண்ணை 1 tsp
- பச்சை கொத்தமல்லி 1 Tbs
- தேங்காய் துருவல் 1 Tbs
செய்முறை
- முதலில் கலக்க கொடுக்கப் பட்டவைகளை நன்றாக்க் கலந்து கொள்ளவும்.
- தேங்காய் துருவல் சுவையைக் கூட்டும் , விருப்பம் இல்லையெனில் விலக்கி விடலாம்.சுவை பெரிதும் மாறி விடாது.
- அதனுடன் கடைசியாகக் கலக்க கொடுக்கப் பட்டவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.
- உடனே ( காலம் தாழ்த்தாமல்)அதை எண்ணை தடவிய ஆழமான தட்டில் கொட்டி பரப்பி விடவும். ஏனெனில் சமையல் சோடா, ஃப்ரூட் ஸால்ட், எலுமிச்சை சாறு ஆகியவை உடனே செயல்படத் துவங்கி விடும்.
- இதை இட்லி பானை அல்லது குக்கரில் ஆவியில் 15 முதல் 20 நிமிடம் வேக விடவும். குக்கரில் என்றால் வெயிட் போட வேண்டாம்.
- வெந்தவுடன் தட்டை தலைகீழ் கவிழ்க்கவும். கேக் போல வந்துவிடும். தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன். சர்க்கரையை நீரில் கரைத்து ஊற்றி நன்றாக கொதித்தவுடன் டோக்ளா மேல் பரவலாக ஊற்றவும். அதன் மேல் தேங்காய் துருவல் , பச்சைக் கொத்தமல்லி தூவி. துண்டுகளாக வெட்டி புதினா சட்னி அல்லது பூண்டு இட்லிப் பொடியுடன் பறிமாறவும்.
❖ ❖ ❖ ❖ ❖ Adapted from K.Parimala’s Kitchen ❖❖ ❖ ❖ ❖