ஞாயிறு, 19 ஜூன், 2016

கும்பகோணம் கடப்பா





கும்பகோணம் கடப்பா


           Perfected to our taste
        By குருபர்ஜி

      # ஐந்து பேருக்குத் தேவையானவை:


 உருளைக்கிழங்கு      2

 பயத்தம் பருப்பு        100 கிராம்



     # ரைக்க வேண்டியவை

 பொட்டுக்கடலை             2    டே. ஸ்பூன்

 பச்சை மிளகாய்               4 - 5

  தேங்காய்                         2 டே.ஸ்பூன்

 கசகசா                             2 டே.ஸ்பூன்

 முந்திரி                            4- 5

 சோம்பு                            ¼  டீ.ஸ்பூன்

      

      # வதக்க

 ❖  பெரிய வெங்காயம்       2

  தக்காளி                         2
 ❖  நல்லெண்ணை             தேவையான அளவு



      # தாளிக்க

 பட்டை                    1 அங்குலம்

 லவங்கம்                  5  - 7

  சோம்பு                    ¼  டீ.ஸ்பூன்
  நல்லெண்ணை       தேவையான அளவு



     # அலங்கரிக்க

பச்சைக் கொத்தமல்லி  கொஞ்சம்  
 

     ## செய்முறை:
  •                 முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.
  •         வெங்காயத்தை நைசாக நறுக்கி  வைத்துக்  கொள்ளுங்கள்.
  •   தக்காளியை நான்காக நறுக்கி வைத்துக்  கொள்ளுங்கள்
  •                   குக்கரில் பயத்தம் பருப்பையும் , நான்காக நறுக்கிய உருளைக்கிழங்கில் சிறிது        மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  •           வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து, லேசாக உதிர்த்து பொடிமாஸ் பண்ணி வைத்துவிடுங்கள்.
  •           இப்போது பொட்டுக்கடலை, சோம்பு, தேங்காய் துருவல், முந்திரி, கசகசா,பச்சை    மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நைசாக அரைத்து விடுங்கள்.
  •         ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வைத்துச் சுட்டதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிவக்க வறுத்து விடுங்கள்.
  •          பிறகு நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்குங்கள்
  •           அதனுடன் பயந்தம் பருப்பு வேக வைத்த தண்ணீர் ஒரு தம்ளர் சேருங்கள்.அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி போட்டு கொதி வந்ததும் முதலில் உதிர்த்து வைத்த உருளைக் கிழங்கைப் போடுங்கள்.
  •             ரைத்து வைத்த தேங்காய் துருவல், பொட்டுக் கடலை சேர்ந்த விழுதையும் போட்டு கொதிக்க விடுங்கள்.
  •                 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வைத்துச் சுட்டதும் சோம்பு போட்டு சிவக்க வறுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், பட்டை,  லவங்கம் போடுங்கள். நன்கு வெடித்தவுடன் கொதிக்கும் கலவையில் கொட்டி தாளித்து இறக்கவும்.
  •            இறக்கி வைத்த சூட்டோடு தேவைப் பட்டால் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து கொள்ளவும்
  •            மேலே பரவலாக கொத்தமல்லி தூவிட்ரஸ்ஸிங்செய்துவிட்டால் கலக்கலான சுவையில் கடப்பாரெடி!

     ❖ ❖ ❖ ❖ ❖  இட்லி, தோசை, பூரிக்கு இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப்  பாருங்கள். கும்பகோணத்து  கைவண்ணத்தின் அருமை அப்போது புரியும்.

 ❖ ❖ ❖ ❖   Adapted From K.Parimala's Kitchen  ❖ ❖ ❖ ❖