வியாழன், 27 ஜூலை, 2017

பதிர் பேணி புது வகை






பதிர் பேணி
New Texture
It is Different 



  தேவையான பொருட்கள் ::::

    பேணி தயாரிக்க ::

   சிரோட்டி ரவா                      1 கப்

   மைதா                                   1 ½கப்

  நெய்                                     2-3 டே.ஸ்பூன்

❖  மஞ்சள் நிறப் பவுடர்            ½ தேக்கரண்டி

  உப்பு                                    ¼ தேக்கரண்டி

❖  சமையல் எண்ணை               பொரிப்பற்கு

     பதிர் தயாரிக்க ::

  நெய்               3 டே.ஸ்பூன்

  அரிசி மாவு    1½ டே.ஸ்பூன்

     சர்க்கரைப் பாகு செய்ய ::

   சர்க்கரை              ½ கிலோ

❖  ஏலக்காய்த்தூள்   1 தேக்கரண்டி

   குங்குமப்பூ            சிறிது

     அலங்கரிக்க ::

   பாதாம் ,முந்திரி, பிஸ்தா (மெலிதாகச் சீவியது)

  வெள்ளரி விதை                 

செய்முறை :::

                      சிரோட்டி ரவாவை ¾ கப் நீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

                        வடிகட்டி மிக்ஸியில் சிறிது நீர் சேர்த்து அறைத்துக் கொள்ளவும்

                       அதனுடன் மைதா சேர்த்து பிசைந்து கொள்ளவும்

                        பிசைந்த மாவை கிரைண்டரில் சப்பாத்தி மாவு பிசையும் ப்ளேடைப் போட்டு
           ஓட விட்டு சிறிது சிறிதாக நெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து  எடுத்து      
           காற்று  புகாத பாத்திரத்தில் வைக்கவும்
                    அரிசி மாவை நெய் சேர்த்து கலக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்
           இது தான் பதிர் எனப்படுகிறது.





                        பிசைந்த மாவில் சின்ன பூரி இடும் அளவுக்கு எடுத்து கண்ணாடி போல் மிக      
               மெலிதாகத் தேய்த்துக் கொள்ளவும்.




              அதன் மேல் செய்து வைத்துள்ள பதிரை (அரிசி -நெய் கலவையை) ப்ரஷால் 
                பரவலாகத் தடவவும்    



 விசிறி மடிப்பில் ஒரு முறை





 விசிறி மடிப்பில் இரண்டாவது முறை



                       தேய்த்த பூரியை விசிறி மடிப்பு ( இரண்டாவது முறை ) போல் மடித்து, அதை வட்டமாக அழுத்தாமல்  பூப்போல (பராட்டாவுக்கு சுற்றுவது போல்) சுற்றி ஒரு புறம்  வைத்துக் கொள்ளவும்.
   
     
                                                                                                                      

                      அதை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளங்கையளவு இலேசாகத் தேய்த்து
          சூடாக்கிய   எண்ணையில் மிகக் குறைந்த தீயில் பொரிக்கவும்.எண்ணையில்,
          ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்தால் நெய்யில் பொரித்தது போல் மணமாக
          இருக்கும்.  பொரித்தெடுத்தவைகளை எண்ணையை வடித்து வைக்கவும்,




                           இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைபோட்டு அது மூழ்கும் அளவுக்கு 
               நீர் விட்டு கொதிக்க விடவும். பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கி 
               வைத்து ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.








                         பொரித்து வைத்துள்ள பேணியை சர்க்கரைப் பாகில் ஒவ்வொன்றாக நனைத்து 
              எடுத்து ஒரு தட்டில் வைத்து உடனே அதன் மேல் முந்திரி பாதாம் தூளைத்  
              தூவவும்.  அப்பொழுதுதான் அவை அதில் நன்றாக ஒட்டிக் கொள்ளும்.   
 


                            அவைகளை காற்று புகாத பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.

          சுவையான பதர் பேணி தயார். அடுக்கடுக்காக இதழ் இதழாக இருக்கும்.
 உடனே சாப்பிடுவதை விட நன்றாக ஊறிய பிறகு சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.பிறகென்ன ஜமாய்ங்க....

        ❖  பொறித்தெடுத்த பதிர் பேணியை சர்க்கரையில் நனைக்காமல் ஒரு காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப் படுத்தவும்.தேவைப்பட்ட போது ஒரு தட்டில் வைத்து சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்த திக்காகக் காய்ச்சிய பாலை சிறிது ஊற்றி பரிமாறலாம். இதைப் பால் பேணி என்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும்.




Adapted from K.Parimala’s Kitchen