பேகிங்பவுடர் அரைதேக்கரண்டி * சர்க்கரை 1கப்(200 கிராம்)
கெட்டி தயிர் 2 தேக்கரண்டி * கொக்கோ பவுடர் 2 Tsp
பாதாம் ,பிஸ்தா(அலங்கரிக்க) *எண்ணை (பொரிப்பதற்கு)
செய்முறை:
மைதா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் இவற்றை ஒன்றாக சலித்து , இதனுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து பிசறவும்.பிறகு தயிர்,ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் கட்டை விரலால் அழுத்தி வைத்துக் கொள்ளவும்.
மிதமான சூட்டில் எண்ணையை காய வைத்து முதலில் ஒரு பாதுஷாவைப் போட்டு பார்த்து அது கரையாமல் மேலே மிதந்து வரவேண்டும்..முதல் பாதுஷா கரைந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.பிறகு மற்ற பாதுஷாக்களையும் போட்டு பொன்நிறமாகப் பொறித்துக் கொள்ளவும் .
சர்க்கரையை ஒரு கம்பி பாகு பதம் வைத்து அந்த சூடான பாகில் பாதுஷாக்களை ஐந்து அல்லது பத்து நிமிடம் ஊற வைத்து தட்டில் அடுக்கி மெலிதாக சீவிய பாதாம் பிஸ்தாவை பாதுஷாக்களின் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக