பயத்தம் பருப்பு உருண்டை
தேவையான பொருட்கள் :
z பயத்தம் பருப்பு (முழு பயிறு ) 1 கப் ( 200 கிராம் )
z பொடித்த சர்க்கரை 1 1/2 கப் ( 300 கிராம் )
z நெய் அரை கப் ( 100 கிராம் )
z ஏலக்காய் தூள் சிறிதளவு( ஒரு சிட்டிகை )
¤ பயத்தம் பருப்பை( தோலுரித்தது ) லேசாக வெறும் வாணலியில் எண்ணை ஊற்றாமல் மணம் வரும் வரை வருத்துக் கொள்ளவும் . ஆறிய பிறகு மாவாக அறைத்துக் கொள்ளவும் . மாவு மில்லில் கொடுத்து நைசாக அறைத்துக் கொள்வது நல்லது .
¤ மாவு , சர்க்கரை , ஏலப்பொடி ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும் . அதனுடன் நெய்யில் வருத்த முந்திரி , திராட்சை ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும் . நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி பிசறி சூட்டிலேயே லட்டு பிடிக்கவும் .கையால் உருண்டை பிடிக்க வராவிட்டால் மேலும் சிறிது சூடான நெய் சேர்த்துக் கொள்ளலாம் .
1 கருத்து:
மிக நன்றாக இருந்தது.நன்றி
கருத்துரையிடுக