சனி, 31 அக்டோபர், 2009

கொக்கோ பாதுஷா-Cocoa Badusha--சமைச்சு பாருங்க அப்புறம் சொல்லுங்க

 கொகோ பாதுஷா  

       தேவையான  பொருட்கள்  :        
*        மைதா   1 1/2  கப் (300 கிராம்) 
   * நெய் 1/2 கப்  ( 100 கிராம் )
**        பேகிங்பவுடர் அரைதேக்கரண்டி
   * சர்க்கரை 1கப்(200 கிராம்)
*        கெட்டி தயிர் 2 தேக்கரண்டி  
   * கொக்கோ பவுடர் 2 Tsp
*        பாதாம் ,பிஸ்தா(அலங்கரிக்க)  
   *   எண்ணை (பொரிப்பதற்கு)
  செய்முறை:
*          மைதா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் இவற்றை ஒன்றாக சலித்து , இதனுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து பிசறவும்.பிறகு தயிர்,ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் கட்டை விரலால் அழுத்தி வைத்துக் கொள்ளவும்.
*          மிதமான சூட்டில் எண்ணையை காய வைத்து முதலில் ஒரு பாதுஷாவைப் போட்டு பார்த்து அது கரையாமல் மேலே மிதந்து வரவேண்டும்.. முதல் பாதுஷா கரைந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும் .பிறகு மற்ற பாதுஷாக்களையும் போட்டு பொன்நிறமாகப் பொறித்துக் கொள்ளவும் .
*          சர்க்கரையை ஒரு கம்பி பாகு பதம் வைத்து அந்த சூடான பாகில் பாதுஷாக்களை  ஐந்து அல்லது பத்து நிமிடம் ஊற வைத்து தட்டில் அடுக்கி மெலிதாக சீவிய பாதாம் பிஸ்தாவை பாதுஷாக்களின் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

பயத்தம் பருப்பு உருண்டை -சமைச்சு பாருங்க அப்புறம் சொல்லுங்க-

      பயத்தம்  பருப்பு  உருண்டை

      தேவையான  பொருட்கள்  :        
z       பயத்தம் பருப்பு  (முழு பயிறு )   1 கப்  ( 200 கிராம் )
z       பொடித்த   சர்க்கரை     1 1/2 கப்  ( 300 கிராம் )
z       நெய்                                 அரை கப்  ( 100 கிராம் )
z       ஏலக்காய்  தூள்           சிறிதளவு( ஒரு சிட்டிகை )
z     முந்திரி  , திராட்சை  1 மேஜைக்  கரண்டி

*
*செய்முறை:                                                                                                                                                                                               
¤              பயத்தம் பருப்பை( தோலுரித்தது லேசாக வெறும் வாணலியில் எண்ணை ஊற்றாமல் மணம் வரும் வரை வருத்துக் கொள்ளவும் . ஆறிய பிறகு மாவாக அறைத்துக்  கொள்ளவும் . மாவு மில்லில் கொடுத்து நைசாக அறைத்துக் கொள்வது நல்லது .     
  ¤          மாவு , சர்க்கரை , ஏலப்பொடி ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும்  .          அதனுடன் நெய்யில் வருத்த முந்திரி  , திராட்சை ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும் .          நெய்யை சூடாக்கி  மாவில் ஊற்றி பிசறி சூட்டிலேயே லட்டு பிடிக்கவும் .கையால் உருண்டை பிடிக்க வராவிட்டால் மேலும் சிறிது சூடான நெய் சேர்த்துக் கொள்ளலாம் .

செவ்வாய், 5 மே, 2009

தமிழக மக்களவை தேர்தல்

********தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் பறந்து பறந்து( சிலர் உண்மையாகவே ஹெலிகாப்டரிலும் பறந்து) தேர்தல் பிரச்சாரம் (பரப்புரையாமே ) செய்து வருகிறார்கள்.நல்ல வெய்யில் காலத்தில் போதாதற்கு இதுவும் சூடு பிடித்து விட்டது.ிரண்டும் சேர்ந்து அனல் பறக்கிறது.அடுத்து வரும் தேர்தல்களையாவது கொஞ்சம் முன்னேயோ பின்னேயோ மாற்ற வேண்டுங்க.தாங்க முடியலை சாமி.சம்பந்தப் பட்டவர்கள் செய்வார்களா ? இங்கே மூன்று அணிகள் அல்ல.நான்கு அணிகள்.இது போதாதா ? ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறை சொல்லுகிறார்கள்.அது சரி.இழித்தும் பழித்தும் பேசுவது என்ன நாகரிகம் ?இதற்கிடையே இலங்கை வாழ் தமிழர் பிரச்சினையை வேறு அரசியலாக்குகிறார்கள்.அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினையை உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக பேசி இன்னும் சிக்கலாக்கி விட்டார்கள்.பாவம் இலங்கைத் தமிழர்கள் தான் இடையிலேஇலங்கை அரசின் கோபத்திற்கு (Wrath ) ஆளாகிறார்கள்.இலங்கை அரசு சாமி ஆடுகிறது.அந்த( உலகளாவிய) எதிர்ப்பில் கோபத்தில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது காட்ட அவர்கள் சின்னா பின்னமாகிறார்கள்.தமிழகக் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை விடுத்து தமிழக இந்திய அரசியலை மட்டும் பேசினால் ிலங்கைப் பரச்சிநை தீர வாய்ப்பிருக்கிறது.செய்வார்களா? மிக மிகக் கவலையாகத்தான் இருக்கிறது.பொறுத்திருந்து பார்க்கலாம்.இனி நாம் மக்களவைத் தேர்தலை மட்டும் பார்ப்போம் இனி வரும் பக்கங்களில்....

புதன், 22 ஏப்ரல், 2009

தமிழ் நாடு தேர்தல்-2009

தமிழ் நாடு தேர்தல்
-------------------------

********தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.தேர்தல் பிரசாரத்தில் எத்தனை வாக்குறுகிகளை அள்ளி தெளிக்கிறார்கள் ஒவ்வொரு கட்சிக் காரர்களும்.இது எல்லாம் சகஜம் தான் என்றாலும் இதுவரை வேறு நிலைப்பாடு கொண்டவர்கள் கூட இப்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியின் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் அடியொற்றி(Copy)வெளியிடுடிருக்கிறார்கள்.அதை விட கூடுதலாக ஒன்றிரண்டு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள்.அவ்வளவுக்கு திமுக அணியின் தேர்தல் அறிக்கை பாதிப்பு ஏற்ப்படுத்தியிருக்கிறது.தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அகில இந்திய அளவிலும் அதன் பாதிப்பு தெரிகிறது.தமிழ் நாட்டைப் பொறுத்த வரை திமுக கூட்டணியனர் சென்ற பாராளுமன்ற,சட்ட மன்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.இம்முறையும் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்கள்.நம்பலாம்.மற்றவர்களைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை சிரித்து விட்டுப்(Just laugh it off)போக வேண்டியதுதான்.மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள் என்பது உண்மை.மீண்டும் சந்திப்போம் விரைவில்.

சனி, 11 ஏப்ரல், 2009

தமிழக தேர்தல். -11-2009

தமிழக தேர்தல்.
---------------------
*** தமிழ் நாட்டில் தொகுதி உடண்பாடுகள் முடிந்துவிட்டன.அதிமுக அணியில் தொகுதி பேச்சு வார்த்தை முடிந்தவுடன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள்.ஆனால் தமிழக காங்கிரஸ் இன்னும் வெளியிடவில்லை.மேலிடம் சென்றிருக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் போல் தெரிகிறது.இதற்கிடையே எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.காங்கிரஸ்,திமுக தேர்தல் அறிக்கைகளில் சாதித்தவைகளையும் சாதிக்கப இருப்பவைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.நிச்சயம் செய்வார்கள். ப.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் பண்டைய கலாச்சாரத்தின் பெருமையும் தமிழ் நாட்டையும் அதன் வளமையையும் பற்றி சொல்லியிருக்கறார்கள்.
....According to foreigners visiting this country, Indians were regarded as the best agriculturists in the world. Records of these travels from the 4th Century BC till early- 19th Century speak volumes about our agricultural abundance which dazzled the world. The Thanjavur (900-1200 AD) inscriptions and Ramnathapuram (1325 AD) inscriptions record 15 to 20 tonnes per hectare production of paddy. Now, even after the first green revolution, according to Government statistics, Ludhiana in the late-20th Century recorded a production of 5.5 tonnes of paddy per hectare. It is, therefore, imperative that India rediscovers an agricultural technology which incorporates all the inputs from our own wisdom and agricultural skills that made us a land of abundance in food...
இது ஐ.பி.என் (I.B.N.)ல் வெளிவந்துள்ள ப..க.வின் முழு தேர்தல் அறிக்கையின் ஒருபகுதி.அறிக்கையின்முடிவிலும்தமிழையுமஅதன் சிறப்பையும் பற்றி பெருமைப்பட்டிருக்கிறது.
நல்ல கரிசனம்.

திங்கள், 6 ஏப்ரல், 2009

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2009

இந்திய பாராளுமன்ற தேர்தல் களம்
இந்திய பாராளுமன்ற தேர்தல் ஆரம்பமாகிவிட்டது.அரசியல் அணி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எதிரணியில் சேர்ந்தால் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் மக்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள். மாற்றி வாக்களிப்பதால் தான் சந்தர்ப்பவாத கூட்டணி சேருகிறார்கள்என்று புரிந்து கொண்டுவிட்டார்கள்.இனி அவர்கள் ஏமாற மாட்டார்கள்.சாதனை புரிந்தவர்களுக்குத் தான் வாக்களிப்பது என தீர்மானித்துவிட்டார்கள்.ஆளும் கட்சியாகயிந்தாலும் அதன் சாதனைகளை எண்ணி ஆளும் கட்சிக்கே வாக்களிக்கும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.இனி அணி மாறுவதெல்லாம் எடுபடாது. இன்னும் தொகுதி பங்கீடு முடிந்த பாடில்லை.வேட்பாளர்கள் அறிவிப்பு வந்த வண்ணம் இருக்கின்றன.விராவில் முடிந்துவிடும்.

செவ்வாய், 24 மார்ச், 2009

அன்புக்குரியவர்களே, இன்று நான் புதியவன்.இனி வரும் புதியன.புதியன போற்றுவோம். தொடரும் ...தொடரும்... நன்றி.மீண்டும் வருவேன்