சனி, 31 அக்டோபர், 2009

கொக்கோ பாதுஷா-Cocoa Badusha--சமைச்சு பாருங்க அப்புறம் சொல்லுங்க

 கொகோ பாதுஷா  

       தேவையான  பொருட்கள்  :        
*        மைதா   1 1/2  கப் (300 கிராம்) 
   * நெய் 1/2 கப்  ( 100 கிராம் )
**        பேகிங்பவுடர் அரைதேக்கரண்டி
   * சர்க்கரை 1கப்(200 கிராம்)
*        கெட்டி தயிர் 2 தேக்கரண்டி  
   * கொக்கோ பவுடர் 2 Tsp
*        பாதாம் ,பிஸ்தா(அலங்கரிக்க)  
   *   எண்ணை (பொரிப்பதற்கு)
  செய்முறை:
*          மைதா, பேக்கிங் பவுடர், கொக்கோ பவுடர் இவற்றை ஒன்றாக சலித்து , இதனுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து பிசறவும்.பிறகு தயிர்,ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் கட்டை விரலால் அழுத்தி வைத்துக் கொள்ளவும்.
*          மிதமான சூட்டில் எண்ணையை காய வைத்து முதலில் ஒரு பாதுஷாவைப் போட்டு பார்த்து அது கரையாமல் மேலே மிதந்து வரவேண்டும்.. முதல் பாதுஷா கரைந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும் .பிறகு மற்ற பாதுஷாக்களையும் போட்டு பொன்நிறமாகப் பொறித்துக் கொள்ளவும் .
*          சர்க்கரையை ஒரு கம்பி பாகு பதம் வைத்து அந்த சூடான பாகில் பாதுஷாக்களை  ஐந்து அல்லது பத்து நிமிடம் ஊற வைத்து தட்டில் அடுக்கி மெலிதாக சீவிய பாதாம் பிஸ்தாவை பாதுஷாக்களின் மேல் வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

பயத்தம் பருப்பு உருண்டை -சமைச்சு பாருங்க அப்புறம் சொல்லுங்க-

      பயத்தம்  பருப்பு  உருண்டை

      தேவையான  பொருட்கள்  :        
z       பயத்தம் பருப்பு  (முழு பயிறு )   1 கப்  ( 200 கிராம் )
z       பொடித்த   சர்க்கரை     1 1/2 கப்  ( 300 கிராம் )
z       நெய்                                 அரை கப்  ( 100 கிராம் )
z       ஏலக்காய்  தூள்           சிறிதளவு( ஒரு சிட்டிகை )
z     முந்திரி  , திராட்சை  1 மேஜைக்  கரண்டி

*
*செய்முறை:                                                                                                                                                                                               
¤              பயத்தம் பருப்பை( தோலுரித்தது லேசாக வெறும் வாணலியில் எண்ணை ஊற்றாமல் மணம் வரும் வரை வருத்துக் கொள்ளவும் . ஆறிய பிறகு மாவாக அறைத்துக்  கொள்ளவும் . மாவு மில்லில் கொடுத்து நைசாக அறைத்துக் கொள்வது நல்லது .     
  ¤          மாவு , சர்க்கரை , ஏலப்பொடி ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும்  .          அதனுடன் நெய்யில் வருத்த முந்திரி  , திராட்சை ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும் .          நெய்யை சூடாக்கி  மாவில் ஊற்றி பிசறி சூட்டிலேயே லட்டு பிடிக்கவும் .கையால் உருண்டை பிடிக்க வராவிட்டால் மேலும் சிறிது சூடான நெய் சேர்த்துக் கொள்ளலாம் .