ஞாயிறு, 24 ஜூலை, 2016

கம்பு தோசை - ரவா தோசைக்கு இணையாக






 Originally shared by
  Gurubarji. M

கம்பு தோசை




   #  சற்று வித்யாசமான சத்தான தோசை ! இந்த நகர் வாழ்கையில் சத்து மிக்க சிறு தானிய உணவுகள் மறந்து போய் விட்டன.கௌரவக் குறைவாக நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
   #  ஆனால் BP, Sugar என்று பாதிப்புகளுக்கு ஆளான பிறகு நிலைமை பெரிதும்மாறிவிட்டது!

   #  சிறு தானியங்கள் இப்பொழுது தானிய வடிவிலும் மாவாகவும் எல்லா டிபார்மெண்டல் ஸ்டோர்களிளும் கிடைக்கிறது.


     கம்பு தோசை


  தேவையான பொருட்கள்:

        (இரண்டு பேருக்கு)
   #  கரைக்க::

     ❖  கம்பு மாவு     : ½ கப்

     ❖  அரிசி மாவு    : 6 டே. ஸ்பூன்

     ❖  இட்லி மாவு   : 1 குழிக் கரண்டி       

     ❖  உப்பு             :தேவைக்கேற்ப
     ❖  தண்ணீர்        :கரைக்கத் தேவையானஅளவு

    
    #   தாளிக்க::

     ❖  கடுகு                    :1 டீ ஸ்பூன்
     ❖  உளுத்தம்பருப்பு   :1டீ ஸ்பூன்

     ❖  சீரகம்                   :1 டீ ஸ்பூன்

     ❖  எண்ணை             :1 டே. ஸ்பூன்



    #  வதக்க::

      ❖  பெரிய வெங்காயம்     :1

      ❖  பச்சை மிளகாய்           :1

      ❖  இஞ்சி                           :1டே.ஸ்பூன்

      ❖  கறிவேப்பிலை             : 1 டே.ஸ்பூன்                 

      ❖  பச்சைக் கொத்தமல்லி : 2 டே.ஸ்பூன்

   வதக்கக் கொடுத்தவற்றில் பச்சை மிளகாயை வில்லைகளாகவும்,
             மற்றவற்றைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்..

   #  குறிப்பு

      இட்லி மாவு இல்லையெனில் பதிலாக  ½ கப் கம்பு மாவுடன்  ½ கப் அரிசி மாவு,
      ½ கப் மோர், தேவையான நீர், உப்பு சேர்த்து  ரவா தோசை பதத்துக்கு
      கரைத்துக் கொள்ளலாம்.




  ❖   செய்முறை:

     #     தோசைக் கல்லை  அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

     #     கல் சூடேறும் நேரத்தில் கரைக்கக் கொடுத்துள்ளவற்றை ரவா தோசைப்

           பதத்திற்குத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

     #    ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றிச் சூடானதும் அதில் தாளிக்கக்

           கொடுத்தவற்றஙற்றைப் போட்டு பொரிய வறுக்கவும்

     #    பின் வதக்கக் கொடுத்த எல்லாவற்றையும் அதோடு சேர்த்து லேசாக வதக்கி

           கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக அடித்துக் கலக்கவும்.

     #    கரைத்த மாவை நன்றாகச் சூடேறிய தோசைக் கல்லில் ரவா தோசை போல்

            பரவலாக ஊற்றி சிறிது எண்ணை விட்டு, பொன்னிறமாக வேக வைத்து

            எடுக்கவும்.

     #     தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

     #     சுவையில் ரவா தோசை தோற்றது போங்கள் !!! அத்தனை மொறு மொறு !!!!! 
     #     வீட்டிலுள்ள எலோரிடமும் விருந்தினர்களிடமும் (?) பாராட்டு மழை தான்.


     குறிப்பு:

      #    அளவுகள் இரண்டுபேருக்கு மட்டும் தான்.தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்

             கொள்ளவும் .
              
                            Adapted from K.Parimala’s Kitchen